HbA1c 7% or 8% for Diabetes in India?

HbA1c 7% or 8% for Diabetes

நமது உடம்பில் கணையம் எனும் நாளமில்லா சுரப்பியில் இருந்து சுரக்கும் இன்சுலின் எனும் ஹோர்மோன் குறைவாக சுரக்கும் போதும் சரியாக வேலை செய்யாத போதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள், உடலிலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்வதுக்கொள்வது போல், ஹெச்.பி.ஏ.1.சி. (HbA1c) பரிசோதனையும் செய்துக்கொள்ளவது நல்லது. இந்த பரிசோதனையின் மூலம் கிடைக்கும் அளவு, ரத்தச்சிவப்பணுக்களிலுள்ள சர்க்கரை அளவின் குறிக்கும். ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையில், ஹெச்.பி.எல்.சி. (HPLC ) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதும், பாதிக்கப்பட்டுள்ளார் எனில் அவரின் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதும் கண்டுபிடிக்கப்படும்.

இந்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் அளவு, 5.6 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் பாதிப்பு இல்லை என்று அர்த்தம். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரைநோய் வரலாம் (Pre-Diabetes) என்று அர்த்தம். இவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.6.5 மேல் இருந்தால் சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட், வருடத்திற்க்கு இரண்டு அல்லது நான்கு முறை செய்யப்படும். 6.5 முதல் 7 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கிறது என்றும் பொருள். 7 சதவிகிதத்துக்கும் மேல் என்றால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இல்லை, 8 சதவிகிதத்துக்கு மேல் என்றால், மிக மோசமான நிலை என்று பொருள்.

ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்டின் அளவீடுகளில்தான் இப்போது சிக்கல் உருவாகியிருக்கிறது. இந்த 7 சதவிகிதம் என்ற அளவு, இப்போது அமெரிக்க மருத்துவர்கள் அமைப்பு (American college of physicians) மூலம் 8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அனால் இதுவே, அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் க்ளினிக்கல் எண்டோக்ரைணாலஜி (American Association of Clinical Endocrinolog), 6.5 தான் சரியான அளவாகக் கூறுகின்றனர். அமெரிக்கன் டயாபிடிஸ் அசோசியேஷன் (American Diabetes Association) 7 சதவிகிதத்தையே சரியெனக் கூறுகின்றனர்.
இந்த இரண்டு அமைப்பும் சில காரணங்களுக்காக (அடிக்கடி சுகர் குறைவு உள்ளவர்கள், வயதானவர்களுக்கு, சரக்கரையினால் பாதிப்பு வந்தவர்களுக்கு, உடல் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு ) 8 சதவிகிதம் வரை பரிந்துரை செய்கின்றனர். பொதுவாக 6.5 முதல் 7 சதவிகிதம் வரை சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றுதான் நோயாளிகள் அறிவுறுத்தப்படுவார்கள். இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்கள் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவுகளை, நோயாளியின் வயது மற்றும் அவரது உடலில் ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளை வைத்துதான் அளவிடுவார்கள். உதாரணமாக, சர்க்கரைநோயைத் தவிர உடலில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் 7 சதவிகிதம் என்ற அளவை மிகத் துல்லியமாக வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். உடல் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், நோயாளியின் உடல் சிகிச்சைக்கு முழுவதுமாக ஒத்துழைக்காது. அவர்கள், 8 சதவிகிதம் வரை இந்த அளவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். இதுபோன்ற சூழலில் சர்க்கரைநோயைத் தவிர உடல் சார்ந்த எந்த பாதிப்பும் இல்லாத ஒருவர் 8 என்ற சர்க்கரை அளவை சரியானதாக நினைத்துக்கொள்வது, அவரது சர்க்கரை பாதிப்பை தீவிரப்படுத்தக்கூடும். இப்படி சர்க்கரைநோய்க்கான பாதிப்பு அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கும். உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்

டாக்டர் ராம்குமார் MD DNB DM (AIIMS)
சர்க்கரை மற்றும் நாளமில்லா சுரப்பி மருத்துவர்